Scrollbar By, CarrielynnesWorld.com CarrielynnesWorld.com Cursor from www.CarrielynnesWorld.com வானவில்லின் வண்ணங்கள்: 06/01/2005 - 07/01/2005

வானவில்லின் வண்ணங்கள்

கவிதைகள்,கதைகள் (என் உயிர் தமிழுக்கு என் உடல் இம் மண்ணுக்கு. என்றென்றும் இம் மண்ணுக்காகவும், நட்புக்காகவும் வாழும் ஜீவன் நான்.)

Thursday, June 23, 2005

அன்னக்கிளி!


அன்னக்கிளி!

அன்னக்கிளி என்று
நினைத்தேன்
உன்னை!

உனக்குப் பின்னால்
அலைந்தேன்!
தினம் தினம் உன்னை
பிடிப்பதற்காக.

நீயோ எட்டாது
பறந்து பறந்து
சென்றாய்.

நானோ விடாது
துரத்தினேன்.
நீ என்கையில்
வந்தாய் பின்பு
தான் தெரிந்தது.


நீ அன்னக்கிளியல்ல
அன்னத்தப் போன்ற
வேஷமுடைய
கிளி என்று!

தோழியே!

தோழியே!
Image hosted by Photobucket.com

நட்பெனும் ஆழ்கடலில்
விளைந்த சிற்பிக்குள்
முத்துத்தான் நாம்!

நட்பு விலை
மதிப்பற்றது!

நமது நட்பிற்கீடாக
எவறும்
எதையும் குறிப்பிட
இயலாது!

எக்காரணத்தைக்
கொண்டும் நான்
இவ் முத்தை
இழக்கவே
மாட்டேனடி தோழி!

இழந்தால் அவ்
முத்துக்கே
அவமானம் அடி!

Saturday, June 11, 2005

கண்டுகொண்டேன்!

கண்டுகொண்டேன்
எந்தன் கனவினில்
உன்னை!

பின்பு கண்டுகொண்டேன்
உன்னை
பூந்தோட்டத்தில்.

என்னவளே உன்னை
கண்டவுடன் உன்
குரலையும் கண்டுகொண்டேன்!

உன்னையே
சுற்றி சுற்றி உன்னைப்
பற்றிக் கண்டுகொண்டேன்!

உனது வகுப்பை
தேடித் தேடி
உன்னை கண்டு
கொண்டேன்!

இத்தனையும்
கண்டுகொண்ட
நான் நீ
இன்னொருவனை
நேசிக்கிறாய் என்று
கண்டு கொள்ளவில்லையே!.....
என் செய்வேனடி நான்??

உமா! சிறுகதை

உமா

அதிகாலை 4 மணி இருக்கும். இலேசாகப் பனிமழை கொட்டிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தேன். வழமையாக எனக்கு 4.30க்குத் தான் வேலை முடியும்.அன்று. 4.00 மணிக்கே வேலை முடிந்து விட்டது. அது தான் அரை மணி நேரம் பேருந்துக்கா க காத்திருக்க வேண்டிஇருந்தது. அந்த சமயம் வந்தாள்அவள்.

அவள் சுமாரான உயரம், சிவந்த நிறம். அடர்த்தியான நீண்ட கூந்தலை அழகாக பிண்ணி விட்டிருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டு வைத்திருந்தாள். இலேசாக மை தீட்டப்பட்ட அழகான கண்கள், இலேசாக சாயம் தடவிய உதடுகள். அவளுடைய முகத்தில் இலட்சுமி கடாட்சம் நன்றாகவே தெரிந்தது. அவளுடைய முகத்திற்கு ஏற்ப அளவான உடம்பு. கனடா நாட்டில் இவ்வளவு அழகுடனும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றும் அந்தப் பெண் ணைக் கண்டதும் நான் வியந்து தான் போனேன்.

அவளை தினமும் வேலை முடிந்து செல்லும் போது காண்பேன். இன்றும் அவள் வந்திருந்தாள். இன்று எப்படியாவது கதைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். ஹலோ! என்றேன். அவளும் பதிலுக்கு " ஹலோ" என்றாள். அவளுடைய அந்த குரலில் கூட அவ்வளவு இனிமை. அவள் பெயர் உமா. ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள். தாயை இழ்ந்த அவள் தனது சகோதரியுடன் வாழ்ந்து வருகிறாள். இவையெல்லாம் நான் உமாவுடன் ஏற்பட்ட சந்திப்பின் போதும், அதற்கு பின் உண்டான நட்பின் போதும் நான் அறிந்து கொண்டேன்.

நாட்கள் பல கடந்தன, உமா மீது கொண்ட நட்பு, அவள் மீது உள்ள பரிதாபத்தால் காதலாக மாற ஆரம்பித்தது. என் காதலை உமாவிடம் கூறினேன் அவள் முதலில் என் காதலை ஏற்கவில்லை. தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டினாள். கனடாவுக்கு வ்ருவதற்காக வாங்கிய கடன் தீரவில்லை தனக்காக கஷ்டப்படும் அக்காவுக்கு துரோகம் செய்ய முடியாது என பலகாரணங்களை சொன்னாள். எனக்கும் அவள் சொல்வது சரியெனபட்டது. எனது காதலை மறக்க முயன்றேன், ஆனால் அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் அவள் என்னை காதலிக்கின்றாள் ஆனால் ஏதோ ஒன்று அதை தடுத்க்கின்றது என்பதை எனக்கு உணர்த்தியது. அவளிடம் நேரில் கேட்டேன். அவளும் ஒப்புக்கொண்டாள்.

"உமா நீ உன் கடமைகளையும் பொறுப்புகளையும் தீர்த்துவிட்டுவா நான் உனக்காக காத்திருப்பேன்"

என்று அவளிடம் கூறினேன் அவளும் சம்மதித்தாள்.நாட்கள் உருண்டன ஒரு நாள் என் நன்பனை பார்க்க ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது எதேச்சயாக உமாவை கண்டேன். அதுவும் ஒரு இளைஞனுடன் கைகோர்த்த படி. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உமா என்னை காணவில்லை எனவே நான் விரைவாக வெளியே வந்து விட்டேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உமாவா இப்படி என்னால் என் கண்களையே நம்ம முடியவில்லை.

சில நாட்களின் பிறகு உமாவின் நண்பி ஒருத்தியை சந்திக்க நேர்ந்தது அப்பொழுது நான் உமா மீது கொண்ட காதலை அவளிடம் கூறினேன். "ரவி உங்களுக்கு உமாவை விட வேறு யாரும் கிடைக்கவில்லையா??" என்றாள் அவளை பற்றிய சில உண்மைகளைச் சொன்னாள். உமாவுக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருக்கின்றது. அவளுடைய நடவடிக்கைகள் ஒரு தமிழ் பெண்ணுக்குரியது அல்ல. அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்டபின் அவளுடன் தான் அவ்வளவாக பழகுவதில்லை என்று கூறினாள் எனக்கு தூக்கிவாரி போட்டது. நம் த்மிழினத்துக்கு உமா போன்ற சில பெண்களால் ஏற்படும் களங்கத்தை எண்ணி வருத்தப்படத்தான் என்னால் முடிந்தது.

( யாவும் கற்பனையே)

Tuesday, June 07, 2005

இதுதான் காதலா?

இதுதான் காதலா?

முதல் முறை
உன்னை
பார்க்கும் போது
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை!

உன்னை காணும்
போதேல்லாம்
என்னுள் நானே
திட்டிக்கொள்வேன்!

ஆனால் இன்று
உன்னை காண
வேண்டும்
என்றுதுடிக்கின்றேன்!

என்னை
அறியாமலேயே
எனக்குள் நீ
புகுந்து விட்டாய்!

இப்பொழுது
இருடலில்ஒருயிராய்
இருக்கின்றாய்
என்னுள் இது தான்
காதலா இல்லை
காதல் செய்த மாயமா?
புரியவில்லையடா
எனக்கு......

சின்னவளே!

சின்னவளே!

சின்னச் சின்ன
கண்ணாலே
என்னைமயக்கி
போட்டவளே!

சின்ன சின்ன
உதட்டாலே
காவியம்பேசியவளே!

சின்ன தென்றலாய்
என்னை
தொட்டுவிட்டுச்
சென்றவளே!

வெண்நிலவாய்
நீ என் முன்
தோன்றினால்
நீயே என் சொர்க்கமடி!
அதுவே என்
ஆயிளுமடி!
 
Free Web Counter
Free Hit Counter